காட்டு யானைகளை விரட்ட களத்தில் இறங்கிய சின்னத்தம்பி

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரக பகுதியில் காட்டு யானைகளை விரட்டு பணிக்காக கலீம் மற்றும் சின்னத்தம்பி ஆகிய கும்கி யானைகள், வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாமிற்கு அழைத்து செல்லப்படுகிறது..
x
திண்டுக்கல் கன்னிவாடி வனச்சரக திற்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்ட இரண்டு கும்கி யானைகள் திண்டுக்கல் கன்னிவாடி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருந்தது இந்நிலையில் தற்போது கும்கி யானைகள் வனப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது இதற்காக முதலில்  சின்னத்தம்பி யானை ஏற்றி செல்லப்படுகிறது

அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட டாப்சிலிப்பில் இருந்து கலீம் சின்னத்தம்பி ஆகிய இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கன்னிவாடி வனச்சரக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது இன்று இரவு காட்டு யானைகள் உள்ள பகுதிக்கு கும்கி யானைகள் இடமாற்றம் செய்யப்பட உள்ளது மேலும் தொல்லை கொடுக்கும்  அந்த ஒற்றை யானையை பிடிக்க வன அலுவலர்கள் வன உயிரின பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்ட  50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர் 

Next Story

மேலும் செய்திகள்