"இது தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக அரசு எப்போதும் ஏழை எளியோர், பட்டாளி மக்களுக்காக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
x
"இது தொழிலாளர்களை வாழ வைக்கும் அரசு" - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக அரசு எப்போதும் ஏழை எளியோர், பட்டாளி மக்களுக்காக செயல்பட்டு வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மே தினத்தையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், சாலையில் நடந்து சென்றபடி பொதுமக்களுக்கு, மே தின வாழ்த்துக்களை தெரிவித்தார். அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், உற்சாகமாக கைகளை அசைத்து வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ், சிவசங்கர் மற்றும் எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்