"54 அரசு பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழி இல்லை"

தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி கொண்ட பள்ளிகளாக செயல்பட்டு வருவதும் அப்பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்கிற அதிர்ச்சித் தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது...
x
தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்றுமொழி கொண்ட பள்ளிகளாக செயல்பட்டு வருவதும் அப்பள்ளிகளில் தமிழ் பயிற்று மொழியாக இல்லை என்கிற அதிர்ச்சித் தகவல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது... அரசுப் பள்ளிகளிலும் LKG தொடங்கி 12ம் வகுப்பு வரை ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்து வருகின்றது அவ்வாறு உள்ள பள்ளிகளில் தமிழும் பயிற்று மொழியாக வகுப்புகள் இயங்கி வருகின்றன.. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட பள்ளிகளாக மாற்றப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது தகவல் உரிமைச் சட்டம் மூலம் பள்ளிக்கல்வித்துறையிடம் தமிழகத்தில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட அரசு பள்ளிகள் எண்ணிக்கை குறித்து கேட்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சென்னை செங்கல்பட்டு ஈரோடு, சேலம் கிருஷ்ணகிரி , திருப்பூர் நீலகிரி, சிவகங்கை,கடலூர், உள்ளிட்ட 17 மாவட்டங்களில் உள்ள குறிப்பிட்ட 54 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஆங்கில பயிற்று மொழியாக கற்பிக்கப்படுகின்ற அரசுப் பள்ளிகளில் தமிழும் பயிற்றுமொழியாக கொண்டு வகுப்புகள் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழி கொண்ட பள்ளிகளாக அவை மாற்றப்பட்டுள்ளது தகவல் வெளியாகியுள்ளது.. இது குறித்து பள்ளிக் கல்வித் துறையிடம் விளக்கம் கேட்டபோது ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழியாக கொண்ட பள்ளிகள் ஒன்றுகூட இல்லை என்று கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்