கன்னிமாரம்மன் கோயில் மாசி திருவிழா - மேளதாளங்களுடன் நடைபெற்ற கிளி பிடித்து கொடுக்கும் நிகழ்வு
திருச்சி அடுத்த வீரப்பூர் கன்னிமாரம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
திருச்சி அடுத்த வீரப்பூர் கன்னிமாரம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான, வளநாட்டில் பொன்னர் சங்கர் தனது தங்கையான, தங்காளுக்கு கிளி பிடித்து கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்படி, மேளதாளங்கள் முழங்க பச்சைக் கிளி ஒன்றை பிடித்து, கூட்டத்தில் உள்ள சிறுமி ஒருவருக்கு வழக்கப்பட்டது. ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
Next Story