"குடும்பமும் முக்கியம்...கடலூரும் முக்கியம்" -கடலூரின் முதல் மேயர் சுந்தரியின் மறுபக்கம்

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தமிழகத்தின் பெண் மேயர்களை வித்தியாசமான கோணத்தில் நேர்காணல் செய்திருக்கிறது தந்தி டிவி குழு. அதில் ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
x
கடலூர் மாநகராட்சியின் முதல் மேயராக அரியணை ஏறியிருப்பவர் தான் சுந்தரி ராஜா...

கடலூர் திமுக நகர செயலாளர் ராஜாவின் மனைவியான சுந்தரிக்கு மூன்று பிள்ளைகள். அதில் இரட்டையர்களும் அடங்குவர். 

கணவர் பொது வாழ்க்கையில் கவனம் செலுத்தி வர, சுந்தரி குடும்ப பொறுப்புகளை வகித்துக் கொண்டே அவ்வப்போது பொது வாழ்க்கையிலும் ஈடுபட்டு வந்தார்

தற்போது முழு நேர அரசியலில் கால் பதித்துவிட்டார்... மேயராக!

வீட்டு பணிக்கு ஊழியர்களை நியமிக்கலாமே என பலர் கூறினாலும், அதில் எனக்கு உடன்பாடு இல்லை எனவும் தானே அனைத்து வேலைகளையும் கவனிப்பேன் என்றும் கூறுகிறார் சுந்தரி.

தற்போது கடலூர் மாநகராட்சி மேயராக செங்கோலை ஏந்தியுள்ள சுந்தரி, தான் விரும்பும் கடலூர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவான சிந்தனைகளை வைத்திருக்கிறார்.

இந்த பதவி கிடைப்பதற்கு கணவரே முழு காரணம் என மகிழும் சுந்தரி, இதுவரை அவர் எதற்காகவும் தன்னை விட்டுக் கொடுத்ததே இல்லை என நெகிழ்கிறார்.

குடும்ப தலைவியாக தன் வீட்டை உயர்த்திய சுந்தரி, இனி மேயராக கடலூரையும் உயர்த்திக் காட்டுவார் என நம்பலாம்

Next Story

மேலும் செய்திகள்