நீலகிரியில் படுகர் இன மக்களின் பாரம்பரிய பண்டிகை கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டத்தில் உப்பு ஹெட்டுவ பண்டிகையை படுகர் இன மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர்.
x
நீலகிரி மாவட்டத்தில் உப்பு ஹெட்டுவ பண்டிகையை படுகர் இன மக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடினர். அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை ஆற்றில் கரைத்து கிடைத்த தண்ணீரை மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர். பின்னர் பணியாரங்கள், கோதுமை தோசைகளை மாடுகளுக்கு கொடுத்து, மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, நெறி செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர். இந்த பண்டிகையை கொண்டாடுவதன் மூலம் வறட்சி நீங்கி மழை பொழிந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது படுகர் இன நம்பிக்கையாக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்