புலிகள் காப்பக பகுதிகளில் அத்துமீறல் - கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

உடுமலை ஆணைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரக பகுதிக்கு வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.
x
உடுமலை ஆணைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட வனச்சரக பகுதிக்கு வனவிலங்குகளை காண சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இந்நிலையில் வனவிலங்குகள் நீர் அருந்தும் புங்க ஓடை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மது அருந்துவிட்டு பாட்டில்களை வீசுகின்றனர். இது விலங்குகளுக்கு அச்சுறுத்தலாகியுள்ளது. அதேபோல் அப்பகுதியில் குரங்குகளுக்கு உணவளிப்பதுபோல், அவற்றின் மீது பாட்டில்கள் போன்றவற்றையும் சுற்றுலா பயணிகள் வீசுகின்றனர். இதனால் வனத்துறையினர் தீவிர ரோந்துபணிகளை மேற்கொண்டு வன பகுதிக்குள் அத்துமீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்