கரும்புத் தோட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மூன்று காட்டு யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது
x
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே மூன்று காட்டு யானைகள் கரும்புத் தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. ஈச்சம்பாடி கிராமத்தில் அருகிலுள்ள ஆந்திர மாநில வனப்பகுதியில் இருந்து மூன்று காட்டுயானைகள் 15 மணி நேரமாக நேற்று மாலையில் இருந்து முகாமிட்டுள்ளது. மேலும் அப்பகுதியிலுள்ள கரும்புத் தோட்டங்கள் மற்றும் விவசாய தோட்டங்களை சீரழித்து வருகிறது. இந்த காட்டு யானைகளால் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் ட்ரோன் கேமரா மூலம் காட்டு யானைகளை கண்டறிந்த பிறகு யானைகளை விரட்ட முயற்சி செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்