கோடியில் புரண்ட மொய் விருந்துகளின் தற்போதைய நிலை..!?

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற மொய் விருந்து களையிழந்து காணப்பட்டதால், அதனை நடத்துபவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
x
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நடைபெற்ற மொய் விருந்து களையிழந்து காணப்பட்டதால், அதனை நடத்துபவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அம்மாவட்டத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக மொய் விருந்து நடைபெற்று வருகிறது. மேலும், கலாச்சார நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த மொய் விருந்தில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பர். இந்நிலையில், கோடியில் புரண்ட மொய் விருந்துகள் தற்போது கஜா புயல், கொரோனா ஊரடங்கு ஆகியவற்றிற்கு பிறகு களையிழந்து வருவதாக அதனை நடத்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பலரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.


Next Story

மேலும் செய்திகள்