விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களை திருடியவர் கைது

விருத்தாசலத்தில், விருத்தகிரீஸ்வரர் கோயிலில் திருடு போன கலசங்கள் மீட்கப்பட்டுள்ளன.
x
விருத்தாசலத்தில், விருத்தகிரீஸ்வரர் கோயிலில் திருடு போன கலசங்கள் மீட்கப்பட்டுள்ளன. 
கடந்த 28 ம்தேதி  மண்டலாபிஷேக விழா நடைபெற்று, இரவு நடை சாத்தப்பட்டநிலையில்,  விருத்தாம்பிகை அம்மன் கோயில் கோபுரத்தில்  நான்கு அடி உயரத்தில் தங்க முலாம் பூசப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மூன்று கலசங்கள் திருடு போயின. புகாரின் பேரில், விருத்தாசலம் காவல் துறையினர் மற்றும் கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேஷ் உள்ளிட்டோர் தனிப்படை அமைத்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், விருதாச்சலம் பெரியார் நகரைச் சேர்ந்த பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சந்தோஷ் குமார், திருடியது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த 3 கலசங்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்