#Breaking : குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் வெற்றி

சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட உமாமகேஸ்வரி 15 வாக்குகளும், எதிர்த்து போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த முத்துலட்சுமி 15 வாக்குகளும் பெற்றனர்.இதைத் தொடர்ந்து நடைபெற்ற குலுக்கல் முறையில் திமுகவைச் சேர்ந்த 22வது வார்டு உறுப்பினர் உமாமகேஸ்வரி நகராட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
x

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சியில்  30 வார்டுகள் உள்ளன. 30 வார்டு  உறுப்பினர்களில் நகராட்சித் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த  22வது வார்டு உறுப்பினர் உமா மகேஸ்வரியும், அதிமுகவைச் சேர்ந்த 4வது வார்டு உறுப்பினர் முத்துலட்சுமியும் போட்டியிட்டனர்.

இதைத் தொடர்ந்து இன்று நகராட்சி கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரியா,கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம் ஆகியோர் முன்னிலையில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் திமுகவைச் சேர்ந்த உமா மகேஸ்வரி 15 வாக்குகளும்,அதிமுகவைச் சேர்ந்த முத்துலட்சுமி 15 வாக்குகளும் பெற்றனர்.
இதனால் குலுக்கல் முறையில் தலைவரை தேர்ந்தெடுக்க  முடிவு செய்தனர் அதன் பிறகு நடைபெற்ற குலுக்கலில் உமாமகேஸ்வரி நகராட்சி தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் நகராட்சிக்கு வெளியே திரண்டிருந்த திமுகவினர் "இது திமுகவின் கோட்டையடா"  என கோஷங்கள் எழுப்பிக் கொண்டே உள்ளே வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி
அவர்கள் உள்ளே நுழைந்து விசில் அடித்துக் கொண்டும், கோஷங்கள் எழுப்பிக் கொண்டும் நகராட்சி கூட்டரங்கினுள் நுழைந்தனர்.
 
மிகுந்த சிரமங்களுக்கிடையில்
போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதன்பிறகு உமாமகேஸ்வரிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரியா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அதிகாரிகள் நகராட்சித் தலைவர் உமா மகேஸ்வரியை தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்