ஆடு திருடிய கும்பலிடம் பேரம் , காவல் ஆய்வாளர் - பணியிடை நீக்கம்
ஆடு திருடிய கும்பலிடம் பேரம் , காவல் ஆய்வாளர் - பணியிடை நீக்கம்
விளாத்திக்குளம் அருகே ஆடு திருடிய கும்பலைக் குண்டர் சட்டத்தில் கைது செய்யாமல் இருக்க பேரம் பேசிய உதவி காவல் ஆய்வாளர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் கங்கை நாத பாண்டியன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பாக, ஆடு திருடும் கும்பலிடம் குண்டாசில் இருந்து விடுவிப்பதாகக் கூறி 3 லட்ச ரூபாய் கேட்டு பேரம் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இது குறித்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், இந்த ஆடியோ புகாரில் தன் மீதான குற்றச்சாட்டை உயர் அதிகாரிகள் உரிய முறையில் விசாரிக்கவில்லை என்று குற்றம் சாட்டி நேற்று கங்கை நாத பாண்டியன் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இந்நிலையில், இன்று காலை அவரை தற்காலிக பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story