ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி - இன்று முதல் தொடக்கம் | TNEB
மின் கணக்கெடுப்பு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி, முதற்கட்டமாக சென்னை தியாகராய நகரில் இன்று தொடங்க உள்ளதாக, மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 கோடியே 60 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன. மின் நுகர்வோர் பயன்பெறும் வகையில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னை தியாகராய நகரில், ஒரு லட்சத்து 41 ஆயிரம் மின் இணைப்புகளில், முதற்கட்டமாக 90 ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள், சோதனை அடிப்படையில் இன்று முதல் பொருத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மின்சாரத்துறை சார்ந்த ஊழியர்கள் நேரடியாக கணக்கெடுப்பை நடத்தாமல், மென்பொருள் மூலம் மின் நுகர்வோரின் செல்போன்களுக்கு, மின் கட்டணம் குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story