மாஸ்டர் பட பாணியில் ஓடி வந்து பேருந்தில் ஏறி வாக்கு சேகரித்த நகல் விஜய்

விஜயைப் போலவே தோற்றமுடைய நபர் மதுரையில் மாஸ்டர் பட பாணியில் ஓடி வந்து பேருந்தில் ஏறி நூதனமாக வாக்கு சேகரித்தார்.
x
விஜயைப் போலவே தோற்றமுடைய நபர்  மதுரையில்
மாஸ்டர் பட பாணியில் ஓடி வந்து பேருந்தில் ஏறி நூதனமாக வாக்கு சேகரித்தார். கேரளாவில் இருந்து நடிகர் விஜயைப் போலவே தோற்றமுடைய நபரை அழைத்து வந்து விஜய் ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக 88வது வார்டில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நாகேஸ்வரிவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது நின்று கொண்டிருந்த பேருந்தில் மாஸ்டர் படம் விஜய் பாணியில் ஓடிவந்து ஏறி, உள்ளே இருந்த பயணிகளுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி நகல் விஜய் வாக்கு சேகரித்தார். பின்பு அங்கு இருந்த தேனீர் கடையில் வடை சுட்டுக் கொடுத்தும் பிரச்சாரம் செய்தார். அப்போது பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என அனைவரும் நகல் விஜயைக் கண்டு ஆச்சரியம் அடைந்தனர். Next Story

மேலும் செய்திகள்