வீட்டின் கதவை உடைத்து, தாழ்ப்பாளை வளைத்து கரடி அட்டகாசம் - பீதியில் உறைந்துள்ள மக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 2வது நாளாக கரடி ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.
x
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே 2வது நாளாக கரடி ஒன்று வீட்டிற்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். நேற்று முன்தினம் கரடி ஒன்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த நிலையில், வீட்டில் இருந்த மூதாட்டி கத்தி கூச்சலிட்டதால் கரடி அங்கிருந்து தப்பி ஓடியது. இந்நிலையில், இன்று மீண்டும் அதே பகுதியில் ராணி ஜோசம் என்பவரது வீட்டிற்குள் தாழ்ப்பாளை வளைத்து கரடி உள்ளே நுழைந்துள்ளது. ராணி ஜோசம் வீட்டில் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து கரடியின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் அச்சம் அடைந்துள்ள அப்பகுதி மக்கள் கூண்டு வைத்து கரடியைப் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்