மகாராஷ்டிராவில் கரை ஒதுங்கிய குமரி விசைப் படகு , "மீன்களை ஏலம் விடப்போவதாக மிரட்டல்"!
குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 10 மீனவர்கள், ஜெகன் என்பவரின் விசைப் படகில், கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
குமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த 10 மீனவர்கள், ஜெகன் என்பவரின் விசைப் படகில், கொச்சி துறைமுகத்தில் இருந்து ஆள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
மஹாராஷ்டிரா கடல் எல்லையில் மீன்பிடித்த போது படகின் ஸ்டீயரிங் உடைந்துள்ளது. சேட்டிலைட் போன் மூலம் இந்திய கடற்படையிடம் உதவி கோரிய நிலையில், மீனவர்களின் சேதமான பகுதியை தற்காலிகமாக சரிசெய்து கொடுத்துள்ளனர். படகை முழுமையாக சரிசெய்வதற்காக, மகாராஷ்டிரா மாநிலம் ரெத்தினகிரி துறைமுகத்துக்கு சென்ற மீனவர்களின் படகை, துறைமுக அதிகாரிகள் சிறைபிடித்துள்ளனர். அனுமதியின்றி நுழைந்ததாகவும், அபராதம் செலுத்துமாறும் கூறிய அவர்கள், மீன்களை ஏலம்விடப் போவதாக கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள மீனவர்கள், உரிய நடவடிக்கை எடுத்து தமிழக அரசு மீட்க வேண்டும் என கோரியுள்ளனர்
Next Story