"பழங்குடியினரின் வீடுகள் ஆக்கிரமிப்பு " - "காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை "

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பழங்குயினருக்கு வழங்கப்பட்ட வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
x
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே பழங்குயினருக்கு வழங்கப்பட்ட வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

 ஆண்டிப்பட்டியை அடுத்த ஏத்தகோவில் மலை பகுதியில் வசித்த பழங்குயினருக்கு அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள், அங்குள்ள சிலர் ஆக்கிரமித்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் தெரிவித்த பழங்குடியினரை ஆக்கிரமிப்பாளர்கள் தாக்கியதில் 3 பேர் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புகார் அளித்தாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்