10,12ம் வகுப்பு வினாத்தாள் கசிந்த விவகாரம் - தேர்வுத்துறை இணை இயக்குனர் அதிரடி விசாரணை

10 மற்றும் 12ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலையில் தேர்வுத்துறை இணை இயக்குனர் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.
x
10 மற்றும் 12ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக திருவண்ணாமலையில் தேர்வுத்துறை இணை இயக்குனர் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த 9ம் தேதி முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு துவங்கியது. இந்நிலையில், இன்று நடைபெறும் 10ம் வகுப்பு அறிவியல் தேர்வு மற்றும் 12ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கான வினாத்தாள்கள் இரண்டும் நேற்று முன்கூட்டியே கசிந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தமிழகம் முழுவதும் விசாரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டது. வினாத்தாள்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியானதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து, அரசு தேர்வுகள் துறை சார்பில் இணை இயக்குனர் பொன்குமார் திருவண்ணாமலை மாவட்ட அரசுப்பள்ளி ஒன்றில் நேரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்