சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு விருது

சாதி, மத சடங்குகளை மறுத்து திருமணம் செய்த இளம்ஜோடிகளுக்கு சுயமரியாதை சுடர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
x
சாதி, மத சடங்குகளை மறுத்து திருமணம் செய்த இளம்ஜோடிகளுக்கு சுயமரியாதை சுடர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி  சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இதில்  திமுக எம்.எல்.ஏ. எழிலன் கலந்து கொண்டு சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு விருதுடன்  ரோஜா பூக்கள்,  புத்தகங்களை பரிசாக வழங்கினார், அப்போது பேசிய அவர், இதிகாசங்களை வைத்து மக்களை பிரிக்கும் நிலை இன்றளவிலும் தமிழ்நாட்டில் நீடித்து வருவதாகவும், அது வருத்தமளிப்பதாகவும் கூறினார். குழந்தை திருமண முறையை முற்றிலும் தடுக்க வேண்டுமென 
எழிலன் கேட்டு கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்