ராஜினாமா பத்திரம் எழுதி கொடுத்து பா.ஜ.க வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 24வது வார்டில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் , பாஜக வேட்பாளர் தளபதி சன்னாசி பாபு என்பவர் 21 வாக்குறுதிகளை அளித்து பொது மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
x
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 24வது வார்டில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில் , பாஜக வேட்பாளர் தளபதி சன்னாசி பாபு என்பவர் 21 வாக்குறுதிகளை அளித்து பொது மக்களிடம் பிரசாரம் மேற்கொண்டு  வருகிறார். தான் வெற்றி பெற்று 6 மாதங்களில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் நகர்மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதை பத்திரத்தில் எழுதி பொதுமக்களிடம் கொடுத்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வித்தியாசமான இந்த பிரசாரம்  வாக்களர்களிடையே வியப்பை  ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்