திரையரங்குகளில் 100% அனுமதி? - முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை துவங்கியது.
x
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன், தமிழ்நாடு முதலமைச்சர்  ஆலோசனை துவங்கியது..

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  தலைமை செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுத்துறை, பேரிடர் மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஆலோசனையில் மழலையர் பள்ளிகள் திறப்பது, திருமணம்,  பொருட்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பார்வையாளர்கள் அதிகப்படுத்துதல் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது

வாய்ப்புகள் :

* 16ம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறப்பது.

* திறந்த வெளி மற்றும் உள் அரங்கு கயிறு பொருட்காட்சிகளை அனுமதிப்பது.

* உணவகங்கள், திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி.


Next Story

மேலும் செய்திகள்