தர்மபுரி வந்த வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி - INA வீராங்கனை சிவகாமி அம்மாள் நெகிழ்ச்சி

தர்மபுரிக்கு வந்த வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை பார்வையிட்டு, தர்மபுரி வீரமங்கை சிவகாமி அம்மாள் நெகிழ்ச்சி அடைந்தார்.
x
தர்மபுரிக்கு வந்த வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை பார்வையிட்டு, தர்மபுரி வீரமங்கை சிவகாமி அம்மாள் நெகிழ்ச்சி அடைந்தார். 
குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் பார்வைக்காக நிறுத்தி வைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரிக்கு வந்த வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியை, மாவட்ட ஆட்சியர் தலைமையில், பொதுமக்கள் மேளதாளத்துடன் மலர்தூவி  வரவேற்றனர். இந்நிகழ்வில் நேதாஜி ராணுவ படையில் பணியாற்றிய தர்மபுரியை சேர்ந்த வீரமங்கை சிவகாமி அம்மாள் கலந்து கொண்டு அலங்கார ஊர்தியை பார்வையிட்டு நெகிழ்ச்சி அடைந்தார். அலங்கார ஊர்தியை பார்த்தது நேதாஜியின் நினைவு அதிகமாகிவிட்டதாக கூறி வீரமங்கை சிவகாமி, தனக்கு வயது 89 ஆனாலும் மன தைரியம் என்னை விட்டு அகலவில்லை என்றார். 


Next Story

மேலும் செய்திகள்