சென்னையில் களமிறங்கிய பறக்கும் படைகள் - விதிமுறைகளை பின்பற்றாத கட்சியினர் மீது நடவடிக்கை
சென்னையில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 12 புகார்கள் பதியப்பட்டுள்ளன
சென்னையில், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக 12 புகார்கள் பதியப்பட்டுள்ளன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, சென்னையில் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் 12 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக ஏழு புகார்கள், விளம்பர பதாகைகள், கொடி தோரணங்கள், அமைதி இன்றி பரப்புரை செய்தது தொடர்பாக ஐந்து புகார்கள் பதியப்பட்டுள்ளன.
Next Story