தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 21 நாகை மீனவர்களையும் வரும் 21ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 21 நாகை மீனவர்களையும் வரும் 21ம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி கடந்த 1ம் தேதி இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, மீனவர்களை விசாரித்த நீதிபதி வரும் 21ம் தேதி வரை அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீனவர்களை விடுவிக்க பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் காவலில் வைக்கப்படுவதும், மறுபுறம் விடுவிக்கப்பட்ட மீனவர்களை நாடு கொண்டு வருவதில் ஏற்படும் தாமதமும் மீனவர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story