ரூ.75 ஆயிரத்துக்கு ஏலம் போன ஒரு எலுமிச்சை

ஈரோடு மாவட்டம் பச்சாபாளையத்தில் அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
x
ஈரோடு மாவட்டம் பச்சாபாளையத்தில் அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சை 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போன சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று இரவு அம்மனுக்கு மறு அபிஷேகம் நடைபெற்ற போது, அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஒரு எலுமிச்சம் பழம் ஏலம் விடப்பட்டது. அதை அப்பகுதியைச் சேர்ந்த கோகுல் ஆனந்தகுமார் என்பவர் 75 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளார். அம்மன் சிலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சையை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்