தாயும் மகனும் அடுத்தடுத்த வார்டுகளில் போட்டி - மகனுக்காக ஓடியோடி வாக்கு சேகரிக்கும் தாய்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 72வயது மூதாட்டியும் அவரது மகனும் தேர்தலில் போட்டியிடும் நிலையில், மகனுக்காக தாயும் தாய்க்காக மகனும் மாறி மாறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
x
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சியில் 72வயது மூதாட்டியும் அவரது மகனும் தேர்தலில் போட்டியிடும் நிலையில், மகனுக்காக தாயும் தாய்க்காக மகனும் மாறி மாறி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 28வது வார்டில் மூதாட்டி முத்தம்மாள் களமிறங்கியுள்ள நிலையில், 27வது வார்டில் மகன் மணி போட்டியிடுகிறார். இந்நிலையில், இளைஞர்களுக்கு இணையாக துறுதுறுவென்று முத்தம்மாள் ஓடியாடி மகனுக்காகவும்... தன் தாய் எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று முத்தம்மாளுக்காக மகன் மணியும் மாறி மாறி வாக்கு சேகரிப்பது அப்பகுதி வாக்காளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்