அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு திடீர் உத்தரவு

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணி நேரத்தில் செல்போன் வைத்திருக்க கூடாது என நாகையில் உள்ள போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது.
x
அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணி நேரத்தில் செல்போன் வைத்திருக்க கூடாது என நாகையில் உள்ள போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது. 

பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது செல்போன் பயன்படுத்துவதாலும், நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து உரையாடுவதாலும் அதிக விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த‌து. இந்நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது, சட்டை மேல் பையில் செல்போன் வைத்திருக்க கூடாது என்றும் அதனை நடத்துநரிடம் ஒப்படைத்துவிட்டு, பணி முடிந்த பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டும் என நாகை போக்குவரத்துக் கழகம்  உத்தரவிட்டுள்ளது. மேலும் அரசு பேருந்து நடத்துநர் பகல் நேரங்களில், ஓட்டுநர் அருகே முன் இருக்கையில் அமரக்கூடாது என்றும் கடைசி இருக்கையில் அமர்ந்து பேருந்தின் இரண்டு படிகளையும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி நேரத்தில் ஓட்டுநர்கள் செல்போன் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை நாகையில் உள்ள போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்