ஆயிரம் கிலோ கறி... ஆண்களுக்கு மட்டுமே அனுமதி... தடபுடலாக நடந்த கிடா விருந்து...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, கள்ளவழி கருப்பனார் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, கள்ளவழி கருப்பனார் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. 

போதமலையில் உள்ள கள்ளவழி கருப்பணார் கோயிலில், ஆண்கள் மட்டுமே சென்று வழிபட வேண்டும் என்பவது ஐதீகம். இங்கு, ஆண்டுதோறும் தை மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று கிடா வெட்டி சமபந்தி விருந்து வைக்கப்படுவது வழக்கம். அதன்படி, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பூஜையில், 39 ஆட்டு கிடா, 19 பன்றிகள், 19 சேவல்கள் அறுத்து முப்பூஜை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஆயிரம்  கிலோ கறியுடன் சமபந்தி விருந்து தயாரிக்கப்பட்டு,  இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிமாறப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்