வரதட்சணை கொடுமை : புகார் மீது நடவடிக்கை இல்லை - காவல் நிலையம் முன்பு இளம்பெண் போராட்டம்

40 சவரன் கொடுத்தும், கூடுதல் வரதட்சணை கேட்பதாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மகளிர் காவல் நிலையம் முன் இளம்பெண் நீதி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
x
40 சவரன் கொடுத்தும், கூடுதல் வரதட்சணை கேட்பதாக அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, மகளிர் காவல் நிலையம் முன் இளம்பெண் நீதி கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்த ஜெயஸ்ரீ-க்கும், நாவலூரை சேர்ந்த ஐடி ஊழியரான சதீஷ்க்கும், 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அப்போது, பெண் தரப்பில், 40 சவரனுடன் சீர்வரிசை செய்துள்ளனர். இதனிடையே, சதீஷின் பெற்றோர் மேலும் நகை, பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக ஒரு வாரத்துக்கு முன் தாம்பரம் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளார். புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் வாயிலில் அமர்ந்து பெற்றோருடன் நீதிகேட்டார். மேலும் காவல் நிலைய ஆய்வாளர், வரதட்சணை  கேட்கும் சதீஸ்க்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தன்னை அலைக் கழிப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதன்போது, காவல் நிலையத்தில் இருந்து வந்த மகளிர் போலீசார், இளம்பெண் ஜெயஸ்ரீ உள்ளிட்டோரிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்