"தேர்தலில் ஜெயிக்கனுமா ? - நாங்க இருக்கோம்" - வேட்பாளர்களை குறி வைக்கும் மோசடி கும்பல்

வாக்காளர்களின் செல்போன் எண்களை தருவதாக கூறி வேட்பாளர்களை குறிவைத்து மோசடி கும்பல்கள் களமிறங்கியுள்ளன.
x
மதுரை மாநகராட்சி, 24வது வார்டில் சுயேட்சையாக சங்கரபாண்டியன் என்பவர் போட்டியிடுகிறார். 

இவருக்கு இந்தியன் எலக்சன் மேனஜ்மெண்ட் நிறுவனத்தின் சென்னை அலுவலகத்தில் பேசுவதாக பெண் ஒருவர் செல்போனில் அழைத்துள்ளார். தேர்தலில் எளிமையாக வெற்றிபெறுவதற்கு ஆலோசனை வழங்குவதாகவும், வாக்காளர்களின் செல்போன் எண்களை தருவதாகவும், அதற்காக ரூ.10 ஆயிரம் கட்டணமாக செலுத்தும்படியும் கூறுகிறார். 

இதை கேட்டு உஷாரான வேட்பாளர், முதலில் 50 செல்போன் எண்களை அனுப்பும்படி கூறிய பிறகு அந்த பெண், அழைப்பை துண்டித்துள்ளார்.

இதுபோன்ற மோசடியை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேட்பாளர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்