நெல்லை மாநகராட்சியில் காங். தனித்து போட்டி?

நெல்லை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து மாநில தலைமையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
x
நெல்லை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுவது குறித்து மாநில தலைமையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக  நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார். நெல்லை மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் தனித்து போட்டியிட முடிவு செய்து மாநில தலைமையிடம் அனுமதி கேட்டுள்ளனர். தனித்து போட்டியிட மாநில தலைமை அனுமதி வழங்கவில்லையென்றால் 3 இடங்களை திமுகவிடமே திருப்பி கொடுத்துவிட்டு, திமுகவினருக்கு தேர்தல் பணி செய்ய தயார் நிலையில் இருப்பதாக நெல்லை காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்