அதிமுக - தேமுதிக கூட்டணியா?

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
x
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றுவரும் நிலையில், இடப்பங்கீட்டில் சுமுக முடிவு எட்டப்படாததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடுவதாக பாஜக அறிவித்தது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுக-தேமுதிக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. புதுக்கோட்டை நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில் 6 வார்டுகளிலும், அறந்தாங்கியில் 3 வார்டுகளிலும், ஆலங்குடியில் 2 வார்டுகளிலும் தேமுதிக போட்டியிட உள்ளதாக தெரிகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற நிலையில், இதுபற்றிய அறிவிப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்