பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
x
முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் கேரள அரசு நடந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி, அணுகு சாலையை சீரமைக்கவும், அங்குள்ள மரங்களை வெட்டவும் அனுமதி அளிக்காமல் கேரள அரசு காலம் தாழ்த்தி வருவதாகவும் தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், இந்த சூழ்நிலையில் அணையின் பாதுகாப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய நீர்வள ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார். எனவே பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட்டு, சரியான ஆய்வு அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்