லாரி மீது பைக் மோதி தந்தை, 2 குழந்தைகள் பலி

வண்டலூர் அருகே நின்றுக் கொண்டிருந்த லாரியில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 குழந்தைகளுடன் தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லாரி மீது பைக் மோதி தந்தை, 2 குழந்தைகள் பலி
x
சென்னை பல்லாவரம் அருகே நாகல்கேணியை சேர்ந்தவர் கோபி. இவர் தனது 10 வயது மகன் சபரி, 7 வயது மகள் மோனிகா உடன் இருசக்கர வாகனத்தில், வண்டலூரில் இருந்து நாகல்கேணி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். 

அப்போது, மண்ணிவாக்கம் அருகே செல்லும்போது, நின்றுக் கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. 

இந்த விபத்தில் படுகாயமடைந்த தந்தை, 2 குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டேரி போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

போலீசார் விசாரணையில், சாலையில் இருட்டான பகுதியில் லாரி நின்றுக் கொண்டிருந்ததால், விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. சாலையில் லாரிகள் நிறுத்துவதை  தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்