நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - கூட்டணியில் இழுபறி - முஸ்லிம் லீக் வெளியேற்றம்

கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் வெளியேற்றம்.
x
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 8 பேரூராட்சிகள் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் இடங்கள் குறித்து முடிவு செய்வதற்காக அமைச்சர்கள் ரகுபதி மற்றும் மெய்யநாதன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

ஒவ்வொரு கட்சிக்கும் நேரம் ஒதுக்கப்பட்டு அந்த நேரத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை அரங்கில் இருந்து வெளியேறினர்.

அதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், மதிமுக மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்