எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியது யார்? - சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடிப்பு

தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர்.
x
தஞ்சையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியவரை சிசிடிவி காட்சி உதவியுடன் போலீசார் கைது செய்தனர். தஞ்சை வடக்கு வீதியில் நான்கு அடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் 2 அடி உயரத்தில் எம்ஜிஆர் சிலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டது. இதனிடையே திடீரென அந்த சிலை மாயமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது அருகே இருந்த பெட்டிக் கடையின் பின்புறம் எம்ஜிஆர் சிலை கண்டெடுக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை விசாரணை செய்த போது அதே பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் இதில் ஈடுபட்டது உறுதியான நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்