திருடனாக மாறிய முன்னாள் போலீஸ் - ரயில் பயணிகளிடம் கைவரிசை

காவல் துறையில் கைவரிசை காட்டியதால், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர், திருடனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
x
காவல் துறையில் கைவரிசை காட்டியதால், பணி நீக்கம் செய்யப்பட்ட காவலர், திருடனாக மாறிய நிலையில் கைது
செய்யப்பட்டுள்ளார். அரக்கோணத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், 2003ஆம் ஆண்டு காவலராக தேர்வாகி பூந்தமல்லி பட்டாலியனில் பணிபுரிந்துள்ளார். அப்போது திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதால், பணியிடை நீக்கமாகி பின்னர், 2010.ல் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, ரயிலில் பைபிள் விற்ற அவர், ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டியுள்ளார். பயிற்சியின் போது வழங்கிய அடையாள அட்டை மூலம் சந்தேக பார்வையில் இருந்து தப்பிய அவர், பயணிகளின் உடைமைகள்,  செல்போன்கள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து திருடி வந்துள்ளார். ரேணிகுண்டா மற்றும் அரக்கோணம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார். இதனிடையே, கடந்த வெள்ளிக் கிழமை, சென்ட்ரல் ரயில் நிலையத்தின் உள்ளே செல்லும் பரிசோதனை செய்ய முயன்ற போலீசாரிடம் தான் காவல்துறை நபர் என கூறிச் சென்றுள்ளார். வெளியே வரும்போது பையுடன் வந்த அவரிடம் நடத்தி விசாரணையில், 4 சவரன் தங்க நகை 2 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். திருடியது என்பதை ஒப்புக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்