பயணிகளை திசை திருப்பி கொள்ளையடிக்கும் நபர்கள் - போலீசார் அதிரடி

மதுரையில், பேருந்து பயணத்தின் போது பயணிகளை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
x
மதுரையில், பேருந்து பயணத்தின் போது பயணிகளை திசை திருப்பி கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றச்சம்பவங்கள் குறித்த புகாரின் பேரில், மதுரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, மொய்தீன், சாதிக் பாட்சா மற்றும் கோபிநாத் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 45 சவரன் தங்கநகைகள் மற்றும் என்பதாயிரம் ரூபாய் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்