அந்த பக்கம் கடையடைப்பு.. இந்த பக்கம் கடை திறப்பு - தமிழக - புதுச்சேரி எல்லையில் விநோதம்

தமிழக - புதுச்சேரி எல்லையில் உள்ள ஒரே சாலையில், புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டும், தமிழக பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் காட்சியளிக்கிறது.
x
தமிழக - புதுச்சேரி எல்லையில் உள்ள ஒரே சாலையில், புதுச்சேரி பகுதியில் கடைகள் திறக்கப்பட்டும், தமிழக பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டும் காட்சியளிக்கிறது. இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் இல்லை. இந்நிலையில், புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் அமைந்துள்ள கடைவீதி சாலையில், புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் உள்ள கடைகள் திறந்து இருந்தன. அதே சாலையில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் சித்தலம்பட்டு பகுதியில் உள்ள கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சாலையின் ஒருபுறத்தில் மக்கள் நடமாட்டமும், மறுபுறத்தில் ஆள்நடமாட்டமின்றி வெறிச்சோடியும் காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்