சட்டக்கல்லூரி மாணவனை தாக்கும் காட்சி..இணையத்தில் வெளியான வீடியோ.

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவனை காவல் நிலையத்தில் வைத்து பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக கூறி வெளியான வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...
சட்டக்கல்லூரி மாணவனை தாக்கும் காட்சி..இணையத்தில் வெளியான வீடியோ.
x
சென்னையில் சட்டக்கல்லூரி மாணவனை காவல் நிலையத்தில் வைத்து பிளாஸ்டிக் பைப்பால் தாக்கியதாக கூறி வெளியான வீடியோ, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...சென்னையில் கடந்த 13ஆம் தேதி இரவு கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டக்கல்லூரி மாணவரான வியாசர்பாடியை சேர்ந்த அப்துல் ரஹீம் முக கவசம் அணியாமல் வந்த நிலையில் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது போலீசார் அப்துல் ரஹீமை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சூழலில் போலீசார், அப்துல் ரஹீமை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்