பார்வையாளர்கள் - காளை உரிமையாளர்கள் இடையே மோதல்

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் - காளை உரிமையாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
x
மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டில் பார்வையாளர்கள் - காளை உரிமையாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. வாடிவாசலில் இருந்து புறப்பட்டு மைதானத்தின் இறுதியில் உள்ள காளை சேகரிக்கும் பகுதிக்கு வந்த காளைகளை அங்கு பார்வையாளர்களாக வந்திருந்த இளைஞர்கள் சிலர் அடக்க முயன்றனர். இதனால், அவர்களுக்கும் காளை உரிமையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர்கள் ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக் கொண்ட நிலையில் அப்பகுதிக்கு வந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்