வடமாநில கொள்ளையரை விரட்டி பிடித்த போலீஸ் - பரபரப்பான சிசிடிவி காட்சிகள்

நகை திருட்டில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை மதுரை போலீசார் விரட்டிச்சென்று பிடிக்கும் சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளது.
x
நகை திருட்டில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை மதுரை போலீசார் விரட்டிச்சென்று பிடிக்கும் சிசிடி காட்சிகள் வெளியாகியுள்ளது. வில்லாபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த  மூதாட்டியிடம் தங்களை போலீஸ் என்று சிலர் அறிமுகப்படுத்தியுள்ளனர். தனியாக வெளியில் நடந்து செல்பவர்கள் நகைகளை அணிந்து வரக்கூடாது என்று கூறி நகையை கழற்றி அவர்கள் கொடுத்த பேப்பரில் வைக்க சொல்லியுள்ளனர். மூதாட்டி சுதாரித்துக்கொண்டு பேப்பரை திறந்து பார்த்த போது கற்கள் இருந்துள்ளது. உடனடியாக மூதாட்டி கூச்சலிடவே அப்பகுதியாக வந்துகொண்டிருந்த சார்பு ஆய்வாளர் தனது இரு சக்கரவாகனத்தில் விரட்டி சென்று கொள்ளையரை பிடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்