கொரோனா நிதி வழங்கியதில் முறைகேடு?..மாவட்ட நிர்வாகம் மீது சந்தேகம்
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நிதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கொரோனா நிதி வழங்கியதில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி வரை கொரோனா நிவாரண நிதி கேட்டு ஆயிரத்து 792 பேர் விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. இவற்றில் விண்ணப்பங்கள் சரி பார்க்கப்பட்டு ஆயிரத்து 390 பேருக்கு நிவாரணத் தொகை ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு விட்டதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கடலூர் மாவட்ட நிர்வாகம் தினந்தோறும் வெளியிடும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களில் நேற்று வரை 876 பேர் மட்டுமே உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த நிவாரணங்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Next Story