கத்தியை காட்டி மிரட்டி கொள்ளையடித்த மர்மநபர்கள்..75 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளை

மதுரை மாவட்டத்தில் வீட்டு உரிமையாளரிடம் கத்தியை காட்டி மிரட்டி 75 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
x
மேலூர் அருகே உள்ள சத்தியபுரம் பகுதியில் கோபி என்பவர் வெளிநாடு சென்று திரும்பிய நிலையில் தனது கிராமத்தில் தங்கி விவசாய வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு இவரது வீட்டிற்கு வந்த 4 பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர்களை கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் அணிந்திருந்த 75 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் ஒரு லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுள்ளனர். அதனோடு, கோபி மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டினுள்ளேயே கொள்ளையர்கள் பூட்டிவிட்டு சென்ற நிலையில் அருகே உள்ளவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அவர்களை விடுவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்