கொரோனா பலி -ரூ.50 ஆயிரம் வழங்க நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூபாய் 182 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
x
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க ரூபாய் 182 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவியை எளிமையாக பெற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அந்த அரசாணையில், தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி வரை கொரோனா தொற்றால் உயிரிழந்த 36 ஆயிரத்து 413 பேருக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வழங்கும் வகையில் மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூபாய் 182 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்