திருடு போன வாகனத்தில் ஜிபிஎஸ் - கையும் களவுமாக மாட்டிக்கொண்ட திருடர்கள் ! | #ThanthiTv

நாகையில் திருடுபோன இருசக்கர வாகனத்தில் இருந்த ஜிபிஎஸ் கருவியால் பல நாள் திருடர்கள் சிக்கியிருக்கிறார்கள். ஜிபிஎஸ் கருவி மூலம் பைக் திருட்டை தடுக்க முடியுமா?
x
நாகையில் உள்ள நாடார் தெரு...
சின்ன பிரீத்
ஓடு வேய்ந்த இந்த கட்டடம், வெறும் தண்ணீர் பாட்டில் குடோனாக பயன்படுவதாகத்தான் அக்கம் பக்கத்தினர் நினைத்திருந்தார்கள். ஆனால், சமீப காலமாக இந்தப் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனங்களும் ஆடுகளும் கோழிகளும் இங்கிருந்து மீட்கப்பட்ட போது அனைவருக்கும் அதிர்ச்சி!
பிரீத்
பல நாளாக நடந்து வந்த இந்த திருட்டு இப்போது வெளிச்சத்துக்கு வரக் காரணம், ஜி.பி.எஸ். ஆம், இரு நாட்களுக்கு முன்பு நாகை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரின் இரு சக்கர வாகனம் திருடு போனது. அதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டிருந்ததால் அதை ட்ராக் செய்த போலீசார், கோழி முதல் ஸ்கூட்டர் வரை பலவற்றையும் திருடி வைத்திருந்த இந்த வெரைட்டி திருடர்களை கொத்தாக அமுக்கியிருக்கிறார்கள். 

இதே போல எல்லோரும் இரு சக்கர வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்தினால் பைக் திருட்டு முற்றிலுமாக ஒழியும் என்கிறார்கள் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள். 

, புதுப்பேட்டை
"திருப்பட்டால் மொபைலில் அலாரம் அடிக்கும்"
"3 மாதங்களுக்கான தகவல்கள் சேமிக்கப்படும்"
"ஜிபிஎஸ் கருவியில் தண்ணீர் படாமல் பார்த்துகொள்வது நல்லது"

தற்போது கல்லூரி செல்லும் இளைஞர்களை பெற்றோர் கண்காணிக்கவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுவதாகவும், ஜிபிஎஸ் கருவியில் மூன்று மாதத்திற்கான பயண விவரங்களை சேமித்து வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

, புதுப்பேட்டை
"குழந்தைகளை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவி"
"வாகனத்தில் இருந்து பேட்டரியை அகற்றும் திருடர்கள்"
"பேட்டரியை அகற்றினாலும் வாகனத்தை கண்டுபிடித்துவிடலாம்"

தற்போது மூவாயிரம் முதல் பத்தாயிரம் வரை ஜிபிஎஸ் கருவி கிடைப்பதாகவும், பல லட்சங்களும் ஆயிரங்களும் கொடுத்து வாங்கப்படும் வாகனங்களின் பாதுகாவலனாக ஜிபிஎஸ் கருவி செயல்படுவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர், வாகன  மெக்கானிக்குகள். 

Next Story

மேலும் செய்திகள்