இளைஞர் சுட்டு கொலை - குற்றவாளிகள் 4 பேருக்கு கை, கால் எலும்பு முறிவு

திண்டுக்கல்லில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
x
திண்டுக்கல்லில் ராகேஷ் குமார் என்பவரை சுட்டு கொலை செய்த வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் சம்பவத்தில் நேரடி தொடர்புடைய பிரகாஷ், மரிய பிரபு, ஜான்சூர்யா மற்றும் கணேசமூர்த்தி ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எலும்பு முறிவு  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்ற போது தவறி விழுந்ததில் எலும்புமுறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 
இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்