ரூ.500 கோடி மதிப்பிலான மரகதலிங்கம் - வெள்ளி பெட்டகத்தில் வைத்து ஒப்பீடு
தஞ்சையில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம், திருக்குவளை தியாகராஜ கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளிப் பெட்டகத்தில் வைத்து ஒப்பீட்டு பார்க்கப்பட்டது.
தஞ்சையில் மீட்கப்பட்ட 500 கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம், திருக்குவளை தியாகராஜ கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு வெள்ளிப் பெட்டகத்தில் வைத்து ஒப்பீட்டு பார்க்கப்பட்டது.
நாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான தியாகராஜர் கோயிலில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு மரகதலிங்கம் திருடப்பட்டது. இதனை கண்டு பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தஞ்சையை சேர்ந்த சாமியப்பன் என்பவரது வங்கி லாக்கரில் இருந்து மரகதலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மீட்கப்பட்ட மரகதலிங்கம் நாகை மாவட்டம் திருக்குவளை தியாகராஜர் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மரகதலிங்கத்தின் பீடம் மற்றும் வெள்ளி பெட்டகத்தையும் ஒப்பிட்டு பார்த்தனர். அப்போது மரகதலிங்கம் முறையாக பொருந்தியிருந்ததையடுத்து மரகதலிங்கம் மற்றும் கோப்புகளை கும்பகோணம் கூடுதல் அமர்வு குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் எடுத்துச் சென்றனர்.
Next Story