தொடர் விடுமுறை எதிரொலி..சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

வார விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தொடர் விடுமுறை எதிரொலி..சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
x
வார விடுமுறை மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய வெளி மாநில சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா, பில்லர் ராக், குணா குகை, பைன் மர சோலை, மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களை, சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் கொடைக்கானல் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி, ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி மேற்கொண்டு மகிழ்ந்தனர். காலை முதல் குளிருடன் கூடிய மிதமான வெப்பம் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்