நிதி நிறுவன தொந்தரவால் விவசாயி உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் நிதிநிறுவனத்தின் தொடர் மிரட்டலால் மாரடைப்பு ஏற்பட்டு விவசாயி ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
அச்சரப்பாக்கம் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்த 62 வயதான விவசாயி நீலமேகம். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது நண்பரான ரவி என்பவர் தனியார் நிதி நிறுவனத்தில் வாகனகடன் பெறுவதற்காக ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளார். இந்நிலையில், கொரோனா காரணமாக சரியாக மாதத்தவணை செலுத்த ரவி தவறியதையடுத்து ஜாமீன் கையெழுத்து போட்ட நீலமேகத்திடம் கடனை நீங்கள்தான் செலுத்த வேண்டும் என நிதிநிறுவன ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இவ்வாறு நிதி நிறுவன ஊழியர்களின் தொடர் மிரட்டலால் நீலமேகம் தனது சொத்துகளை விற்க முயன்று போது அதிலும் பிரச்சினை இருப்பதாக கூறி அவரை மீண்டும் மிரட்டி உள்ளனர். இதனால் பெரும் மன உளைச்சலில் இருந்த நீலமேகம் நிதிநிறுவன ஊழியர்களிடம் சொத்து தொடர்பாக செல்போனில் பேசிக்கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இதற்கு காரணமாக இருந்த நிதிநிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story